மூளைச்சாவு - இறப்பிலும் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்
மதுரை, 20 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள சத்திர தொண்டைமான் பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி கவிதா (51). இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி பிற்பகல் மதுரை திருப்பாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப
Donate


மதுரை, 20 மார்ச் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள சத்திர தொண்டைமான் பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.

இவரது மனைவி கவிதா (51). இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி பிற்பகல் மதுரை திருப்பாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது வாகனம் விபத்தில் சிக்கியதில், அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கவிதாவின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர்.

இதற்கு அவரின் கணவர் ஆனந்தனிடம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், கவிதாவின் கல்லீரல், சிறுநீரகம், கருவிழி உள்ளிட்டவை தானம் செய்யப்பட்டன.

புதுக்கோட்டையில் உள்ள முத்து மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லீரலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகமும், கருவிழிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN