சேலம் அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு டிடிவி தினகரன் இரங்கல்
சென்னை, 20 மார்ச் (ஹி.ச.) கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி பயணிகளுடன் இன்று (20.03.2026) அரசுப் பேருந்து சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்த
சேலம் அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு டிடிவி தினகரன் இரங்கல்


சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)

கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி பயணிகளுடன் இன்று (20.03.2026) அரசுப் பேருந்து சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பைக்கில் இருந்த தாய், மகன் ஆகிய இருவரும் டெம்போவில் பயணித்த 11 மாதக் குழந்தை, 5 வயது சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆறுதல் தெரிவித்துள்ளார்

இது குறித்து டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b