Enter your Email Address to subscribe to our newsletters

உத்தராகண்ட், 20 மார்ச் (ஹி.ச.)
உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது.
டேராடூன் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
லோக் பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில ஆளுநர் குர்மீத் சிங் முன்னிலையில், புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
புதிய அமைச்சர்களாக கஜன் தாஸ் (ராஜ்ப்பூர்), மதன் கௌஷிக் (ஹரித்வார்), பிரதீப் பத்ரா (ரூர்க்கி), பாரத் சௌத்ரி (ருத்ரபிரயாக்) மற்றும் ராம் சிங் கைரா (பீம்தால்) ஆகியோர் பதவியேற்றனர்.
மாநில அமைச்சரவையில் ஐந்து இடங்கள் காலியாக இருந்த நிலையில், எம்.எல்.ஏ-க்களின் செயல்திறன் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர், எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் ஆகியோர், அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM