ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதல்
தெக்ரான், 22 மார்ச் (ஹி.ச.) அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து கடந்த 28ஆம் தேதி ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் தற்போது 22-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஈரான் மீது ஆகாய மார்க்கமாகத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பத
ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதல்


தெக்ரான், 22 மார்ச் (ஹி.ச.)

அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து கடந்த 28ஆம் தேதி ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் தற்போது 22-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் ஈரான் மீது ஆகாய மார்க்கமாகத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ முகாம்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்துத் தாக்கி வருகிறது.

இந்நிலையில், ஈரானின் முக்கியமான அணு ஆற்றலைச் செறிவூட்டும் இடமான நட்டான்ஸ் (Natanz) மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலின் காரணமாக இதுவரை எந்தவிதமான அணுக்கதிர்வீச்சு கசிவும் உண்டாகவில்லை என்று ஈரான் அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், இது உலக நாடுகளின் சட்டதிட்டங்களை மீறிய செயல் என்றும் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில், இஸ்ரேலின் கிண்டர் கார்டன் உட்பட 12 இடங்களில் குண்டுகளை வீசி ஈரான் தாக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / JANAKI RAM