முற்போக்கு என்ற பெயரில் இந்துக்களின் மீது தாக்குதல் நடக்கிறது - பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன்
மதுரை, 22 மார்ச் (ஹி.ச.) தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் மதுரை எஸ். எஸ்.காலனி மகா பெரியவா கோவிலில் பராபவ வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் வெளியிட மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர்
ய


மதுரை, 22 மார்ச் (ஹி.ச.)

தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் மதுரை எஸ். எஸ்.காலனி மகா பெரியவா கோவிலில் பராபவ வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா நடைபெற்றது.

பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் வெளியிட மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு பெற்றுக் கொண்டார்.

தாம்பரம் சங்க மாநில சேர்மன் ராகவ நாராயணன் தலைமை தாங்கினார் நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் ராஜ்மோகன், பொதுச் செயலாளர் வரதராஜன், பாப்பாங்குளம் கிருஷ்ணன் ஜெய் ஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் இராமஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

முற்போக்கு என்ற பெயரில் தமிழகத்தில் மட்டுமே இந்து பண்பாட்டின் மீது தாக்குதல் அதிகமாக நடந்தது.

இந்திமொழிக்கு எதிராக ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர் குறித்து ஸ்டாலின் உருகி உள்ளார். யாரும் தற்கொலை செய்யக்கூடாது.மனிதஉயிர் மாண்புடையது.

ஆனால் ஒன்றை உயர்த்தியும், மற்றொன்றை தாழ்த்தியும் பேசக்கூடாது. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார்.

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்காக பூர்ணசந்திரன் இறந்தபோது எங்கே சென்றார் ஸ்டாலின். அப்போது ஏன் ஸ்டாலின் உருகவில்லை. கேவலமான ஆட்சி திமுக ஆட்சி.

தற்போது திமுக கூட்டணியில் விசிக, சிபிஎம் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். தவாக கட்சி வேல்முருகன் இப்போது கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளார்.

திமுக கூட்டணியில் ஒவ்வொரு டயரும் ஒவ்வொரு பக்கம் செல்கிறது. கடைசி வரைசென்று சேர்வார்களா என தெரியவில்லை.

திமுக கூட்டணியில் ப்ரேக் இல்லை ஆக்சிலேட்டர் இல்லை. ஆனால் என்டி ஏ கூட்டணியை பற்றி குறை சொல்கிறார்கள்.

முதலில் ஸ்டாலின் தனது சொந்த வீட்டை ஒழுங்கு செய்ய வேண்டும். பிறகு மற்றவர்களை பற்றி அவர் பேசட்டும். திமுக கூட்டணியில் கிராக்ஸ் ஆக உள்ளனர். அந்த கூட்டணியில் இனி கிராக் தான் வரும்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசிய விசிகவுக்கு இப்போது திமுக சீட்டில் கூட பங்கு இல்லை என சொல்லி உள்ளது.

கூட்டணி குறித்து விசிகவுக்கு தற்போது திமுக பாடம் நடத்துகிறது. திருமாவளவன் வேற என்ன செய்ய முடியும். கட்சியை திமுகவிடம் அடகு வைத்துள்ளார் திருமாவளவன். அதனால் அவர் வருத்தப்பட்டு தான் பேச முடியும்.

கம்யூனிஸ்ட்டுகள் இடது பக்கம் ஒரு அலுவலகத்தையும், வலது பக்கம் ஒரு அலுவலகத்தையும் வைத்திருப்பார்கள். ஆனால் சென்டில்மென்ட்டாக அவர்கள் தலைமை அலுவலகம் தற்போது அண்ணா அறிவாலயத்தில் தான் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்த்தால் பாவமாக உள்ளது. அவர்களுக்கே தொகுதியில் போட்டியிடவே ஆள் இல்லை.

சத்தியமூர்த்தி பவனும் அண்ணாஅறிவாலயத்தில் தான் உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு கோமாவில் இருந்து வெளியே வந்து 2 சீட்டு கூடுதலாக வாங்கி உள்ளனர். அவர்கள் எங்களை பற்றி பேசுகிறார்கள்.

திமுக வேகமாக தேர்தலை சந்திக்கிறது. நாங்கள் ஏன் வேகமாக ஓட வேண்டும்.

இரண்டுமூன்று நாட்களுக்குள் யாருக்கு என்ன தொகுதி. கூட்டணி பங்கீடு குறித்து முழுமையாக தெரிந்துவிடும்.

ராகுல்காந்தியை பார்க்க கனிமொழி டெல்லி செல்லவில்லையா. கருணாநிதி காலத்தில் சிபிஐ வைத்து மிரட்டி இடங்களை பெறவில்லையா. அறிவாலயத்தில் மேலே கூட்டணி பேச்சு, கீழே ரெய்டு நடந்தது. எடப்பாடி பழனிசாமியை மிரட்டி எதற்காக அமித்ஷா அழைக்க வேண்டும். இது திமுகவின் கொச்சைப்படுத்தும் செயல்.

விஜயை நாங்கள் மிரட்டியா சிபிஐ விசாரணைக்கு அழைத்தோம். யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஆதவ் அர்ஜூனா அவருக்கு என்னப்பா பைத்தியம் என்பது போல ரஜினியை பற்றி பேசுகிறார். யார் யாரை பற்றி பேசுவது?

எம்.பி.ஜோதிமணி காங்கிரஸ் பேருந்தில் ஏறிவிட்டு விஜய் பேருந்தில் துண்டு போடுகிறார். எதிர்காலத்தில் விஜயால் பலன்பெற இப்போதே துண்டு போட்டு வைக்கிறார்.

சசிகலா ராமதாஸ் இருவரும் பாவம். தள்ளாத வயதில் இவ்வளவு போராட வேண்டிய தேவை இல்லை. இரண்டு பெரிய முதியவர்கள் கூட்டணி அமைத்து என்ன செய்ய போகிறார்கள்.

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியா என்ற கேள்விக்கு, நான் சமைக்க வந்தவன். சாப்பிட வந்தவன் அல்ல. தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வேன். என்றார்.

Hindusthan Samachar / Durai.J