Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 22 மார்ச் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 75 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தேர்தல் பறக்கும்படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழு தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பார்த்திபனூர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராமகிருஷ்ண பிரபு தலைமையின் கீழ் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை சோதனை இட்டதில் பரமக்குடி மணி நகரை சேர்ந்த சசிரேகா என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சொல்லப்பட்ட 75 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை பரமக்குடி வட்டாட்சியர் ராமமூர்த்தி அறிவுறுத்தரின் பேரி பரமக்குடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 75 சவரன் தங்க நகையின் மதிப்பு சுமார் 81 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.
Hindusthan Samachar / ANANDHAN