முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம்
புதுடெல்லி, 22 மார்ச் (ஹி.ச.) கடந்த 23 நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நீடித்து வருகிறது. இந்தப் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்
Modi holds consultation meeting


புதுடெல்லி, 22 மார்ச் (ஹி.ச.)

கடந்த 23 நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நீடித்து வருகிறது. இந்தப் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தப் போர் இன்னும் நீண்டு கொண்டே சென்றால், இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் உரங்கள் போன்ற முக்கிய துறைகளின் நிலையை ஆய்வு செய்கிறார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் முடக்கப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனவே, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b