ரம்ஜான் விடுமுறை காரணமாக உதகையில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்
உதகை, 22 மார்ச் (ஹி.ச) சுற்றுலா நகரமான உதகைக்கு தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள்
Ooty


உதகை, 22 மார்ச் (ஹி.ச)

சுற்றுலா நகரமான உதகைக்கு தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை உதகைக்கு படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக கேரளா மாநில சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வந்தனர்.

இதனால் நேற்று மாலை முதலே உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

இதனிடையே இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்ததால் அரசு தாவரவியல் பூங்கா மற்றும் பட இல்லத்திலும் கூட்டம் அலைமோதுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உதகை தாவரவியல் பூங்கா சாலை, படகு இல்ல சாலை என பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவிற்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, கிக்யூ புல்வெளி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிப்பதுடன் படகு சவாரி செய்ய படகு இல்லத்திற்கும் வரும் சுற்றுலா பயணிகள் மிதி படகு மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் உதகையில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை போக்குவரத்து போலீசார் சீர் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ