Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களை ஒன்றிணைக்கும் ’ரோர் 26’ (ROAR 26) என்ற பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை இன்று (மார்ச் 22) நடத்துகிறது.
இந்த விழா மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் சுரேஷ் ரெய்னா, மாத்யூ ஹெய்டன், முரளி விஜய், சுப்ரமணியம் பத்ரிநாத் உள்ளிட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களும் தற்போதைய அணியினரும் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேரலை இசை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது.
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM