Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 மார்ச் (ஹி.ச.)
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, நாடாளுமன்றத் தெருவில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக வளாகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்குடன் தொடர்புடைய புதுப்பிக்கப்பட்ட ‘வரலாற்று நீதிமன்றத்தை’ இன்று திறந்து வைத்தார்.
இதனுடன், பகத் சிங்கின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், முதல்வர் குப்தாவுடன் டெல்லி அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டு, தியாகிகள் பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாப்பர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினர்.
நாட்டின் சுதந்திரத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூரும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ரேகா குப்தா,
மார்ச் 23 ஆம் தேதி ஆண்டுதோறும் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந் நாள், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது என்றார்.
சட்டமன்ற குண்டுவீச்சு சம்பவத்திற்குப் பிறகு பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற இடம் இதுவே.
இன்றும் இந்த வளாகம் அக்காலத்தின் சுவடுகளைத் தக்கவைத்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இவ்விடத்தை வந்து காண வேண்டும்.
மேலும், பகத் சிங்குடன் தொடர்புடைய வரலாற்றுச் சின்னங்களை புதுப்பித்து பொதுமக்களுக்கு வழங்கியதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் அதிகாரிகளை முதல்வர் பாராட்டினார்.
நமது தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் இந்த நாளில், அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் என்றும் நினைவில் கொண்டிருப்போம் என உறுதியேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாப்பர் ஆகியோர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய புரட்சியாளர்களாகத் திகழ்ந்தனர்.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று லாகூர் சிறையில் பிரிட்டிஷ் ஆட்சியினரால் தூக்கிலிடப்பட்ட அவர்கள், இளம் வயதிலேயே தியாகமடைந்தனர்.
அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் மார்ச் 23 ‘ஷஹீத் திவாஸ்’(தியாகிகள் தினம்) என நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM