Enter your Email Address to subscribe to our newsletters

தேஜ்பூர், 23 மார்ச் (ஹி.ச.)
அசாம் மாநில சோனித்பூர் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.
அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM