Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 23 மார்ச் (ஹி.ச.)
முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து, யோகி ஆதித்யநாத் தொடர்ந்து ‘ஜனதா தர்ஷன்’ போன்ற நேரடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் அரசு மற்றும் பொதுமக்கள் இடையிலான தொடர்பு வலுப்பெறுவதாகவும், மக்கள் பிரச்சினைகள் நேரடியாக தீர்வு பெறும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று லக்னோவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ‘ஜனதா தர்ஷன்’ நிகழ்ச்சியில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் மனுக்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வில், மக்கள் தங்களது நீண்டநாள் நிலுவையில் உள்ள பிரச்சினைகள், நிர்வாகத் தாமதங்கள், அடிப்படை வசதிகள் குறைபாடுகள் மற்றும் சமூக நலத் திட்டங்களுடன் தொடர்புடைய கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் ஒவ்வொரு மனுவையும் கவனமாக பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், குறைகள் காலதாமதமின்றி, வெளிப்படையான முறையில் மற்றும் மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
எந்தவொரு நிலையிலும் பொதுமக்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது என்றும், நிர்வாகம் மக்கள் மையக் கொள்கையுடன் செயல் பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / JANAKI RAM