Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 23 மார்ச் (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் சர்வீஸ் சாலையில் அழகிரிசாமி வயது (65 ) என்பவர், சென்னையில் காதி பவனில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற நிலையில், குடும்பத்துடன் வாலிகண்டபுரம் சரோஜா ஆசிரியர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வங்கியில் இருந்து மீட்கப்பட்ட நகையை வீட்டில் வைத்து விட்டு சென்ற நிலையில், இன்று அதிகாலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 44 பவுன் கொள்ளை அடித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்கள் அவரது உறவினர்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டு, சென்னையிலிருந்து வந்து கொண்டுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதேர்ச்சையாக நடந்த கொள்ளையா? இல்லை அழகிரிசாமியை நோட்டமிட்டு, அவர் நகையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்ற பின்பு நடந்த கொள்ளையா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN