Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 மார்ச் (ஹி.ச.)
இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கிய செயற்பாட்டாளராகவும், சோசலிச அரசியல் தலைவராகவும் இருந்த ராம் மனோகர் லோஹியா பிரஜா சோசலிஸ்ட் கட்சி மற்றும் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.
1962-ல், லோஹியா புல்பூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். 1963-ல், அவர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஃபரூக்காபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் 1967-இல், அவர் கண்ணோஜ் தொகுதியிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார்.
இன்று ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் சமூக நீதியின் குரலாகவும் நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஜி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். அவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்.
காலனி ஆதிக்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றிய அவர், 1947-க்குப் பிறகு இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களித்தார்.
அவர் ஒரு தலைசிறந்த சிந்தனையாளர் மற்றும் சமூக நீதியின் முதன்மையான குரல்களில் ஒருவர்.
ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது.
பாலின சமத்துவம் மற்றும் பங்கேற்பு ஆட்சிமுறை குறித்த அவரது சிந்தனைகளும் அதே அளவு குறிப்பிடத்தக்கவை.
என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b