நீலகிரியில் இதுவரை 41 லட்சம் பணம், 2.18 கோடி பொருட்கள் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தகவல்!
நீலகிரி, 23 மார்ச் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை ரேண்டமையசேசன் (EVM randomisation) முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு உதகையில் உள்ள மாவட்ட ஆட்ச
Lakshmi Bhavya Thaneeru


நீலகிரி, 23 மார்ச் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை ரேண்டமையசேசன் (EVM randomisation) முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் நிலையில் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு ஆன்லைனில் ரேண்டம்ஸேசனை செய்து வாக்கு எந்திரங்களை மூட தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய லட்சுமி பாவிய தண்ணீரு, நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 15 முதல் 22 வரையிலான ஒரு வாரத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு 71 புகார்கள் வந்துள்ளது. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளது.

தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் இதுவரை சுமார் 41 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், சுமார் 2.18 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் என சுமார் 2.59 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருட்களில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு இதுவரை 2.48 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக தெரிவித்தார். வாக்குப்பதிவு அதிகரிக்க கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவான 13 மையங்கள் கண்டறிந்து இருப்பதாகவும் அங்கு வாக்கு பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

வாக்குப்பதிவின் போது போக்குவரத்து வசதி இல்லாத பழங்குடியின மக்களை வாகனங்கள் மூலம் அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நீலகிரிக்கு வருவோர் உண்மையான சுற்றுலாப் பயணிகள் தானா? என்பதை ஆய்வு செய்து, பின் பணம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்வதில்லை.

தேவைக்கு அதிகமான ரொக்க பணம் அல்லது தங்கத்தை வைத்திருந்தால் நிச்சயமாகப் பறிமுதல் செய்யபடும் என்று தெரிவித்தார். சுற்றுலா பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யபடும் பணம் அல்லது பொருட்களை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டும்.

ஆனால் ஓரிரு சுற்றுலாப் பயணிகளின் புகார்கள் வரப்பெற்று, நாங்கள் 24 மணி நேரத்திற்குள்ளேயே அவற்றை விடுவித்து இருப்பதாக கூறினார். 50 ஆயிரத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் பணம் எடுத்து வர தளர்வு எதுவும் இல்லை.

வாகன சோதனை என்ற பெயரில் உண்மையான சுற்றுலா பயணிகளை துன்புறுத்தக் கூடாது என தேர்தல் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN