Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 23 மார்ச் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிறுநாவலூர் ஊராட்சி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் யோகநாத் வயது 31. அதே ஊரைச் சேர்ந்த அவரது மாமன் மகன் வினோத் என்பவர் கடந்த மாதம் சிறுநாவலூர் ஏரியில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை ரூபாய் 2 லட்சம் தொகைக்கு எடுத்ததாக தெரிகிறது.
அது சம்பந்தமாக நேற்று முன்தினம் யோகநாத் மற்றும் வினோத் இருவரும் வாத்தலை பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலாளர்களை வேனில் அழைத்து வந்து இரவு வேளையில் சிறு நாவலூர் ஏரிப் பகுதியில் மீன் பிடிக்க முயன்றதாக தெரிகிறது.
அப்பொழுது அங்கு வந்த சிறு நாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வயது 40 அவரது நண்பர்கள் ஜெயராமன் வயது 32, ரகு வயது 34 ஆகியோர் மீன் பிடிக்கும் முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அழைத்து வந்த வேனை சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.
அதை தட்டி கேட்ட யோகநாத் மற்றும் அவரது தந்தை மணிவேல் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இருவரையும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யோகநாத் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி, விசாரணை மேற்கொண்டு, சிறுநாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், அவரது நண்பர்கள் ஜெயராமன் ரகு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் ஜெயராமனை கைது செய்துள்ளனர்.
தப்பி ஓடிய ரகுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN