Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 மார்ச் (ஹி.ச.)
இந்தியாவின் புரட்சிகர சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங், சுகதேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜகுரு ஆகியோர் முக்கிய பங்கு வகித்தவர்கள்.
இவர்கள் மூவரும் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, லாகூர் சிறையில் பிரிட்டிஷ் ஆட்சியினரால் தூக்கிலிடப்பட்டனர்.
லாகூர் சதி வழக்கில் இவர்களின் பங்களிப்பு மற்றும் 1928ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை இந்த நாளின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.
அவர்களின் உன்னதத் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 23 ‘தியாகிகள் தினம்’ ஆக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு மற்றும் சுகதேவ் தாப்பர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது ,
தியாகிகள் தினமான இன்று, அஞ்சா நெஞ்சம் கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு எனது மரியாதை செலுத்துகிறேன்.
அவர்களின் ஒப்பற்ற துணிச்சல், உறுதியான நம்பிக்கை மற்றும் நாட்டுப்பற்று இன்றும் நம்மை வழிநடத்துகிறது.
என்று அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b