2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தற்போதைய நிலைப்பாடு!
புதுச்சேரி, 24 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தே
2026 Puducherry: Current Electoral Landscape


புதுச்சேரி, 24 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பாதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும்.

கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது.

புதுச்சேரியில் என்.டி.ஏ.- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க- அ.தி.மு.க- ல.ஜ.க இடம் பெற்றுள்ளன.

இதில், என்.ஆர். காங்கிரஸ் 16, பா.ஜ.க 10, அதிமுக 2, ல.ஜ.க 2 இடங்களில் போட்டியிடுகின்றன.

என்.டி.ஏ.- தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள்

என்.ஆர்.காங்கிரஸ்

தட்டாஞ்சாவடி – ரங்கசாமி

கதிர்காமம் – கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ.

இந்திரா நகர் – ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.

லாஸ்பேட்டை – வி.பி.சிவக்கொழுந்து (முன்னாள் சபாநாயகர்)

முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன் (முன்னாள் எம்.எல்.ஏ.)

அரியாங்குப்பம் – அய்யப்பன்

ஏம்பலம் (தனி) – மோகன்தாஸ்

நெட்டப்பாக்கம் (தனி) – ராஜவேலு (துணை சபாநாயகர்)

பாகூர் – தியாகராஜன் (முன்னாள் அமைச்சர்)

திருபுவனை (தனி) – கோபிகா (முன்னாள் எம்.எல்.ஏ.)

வில்லியனூர் – ரவிக்குமார்

உழவர்கரை – நாராயணசாமி (எ) நித்தியானந்தம்

நெடுங்காடு – சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.

காரைக்கால் வடக்கு – அமைச்சர் திருமுருகன்

ஏனாம் – மல்லாடி கிருஷ்ணாராவ்

(முன்னாள் அமைச்சர்)

பா.ஜனதா :

ராஜ்பவன் – வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா மாநில தலைவர்)

மண்ணாடிப்பட்டு – அமைச்சர் நமச்சிவாயம்

மணவெளி – சபாநாயகர் செல்வம்

காலாப்பட்டு – கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.

ஊசுடு – தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.

முதலியார்பேட்டை – அமைச்சர் ஜான்குமார்

திருநள்ளாறு – ஜி.என்.எஸ்.ராஜசேகரன் எம்.எல்.ஏ.

நிரவி – திருபட்டினம் – மீனாட்சி சுந்தரம்

காரைக்கால் தெற்கு – அருள்முருகன்

மாகி – தினேஷன்

அ.தி.மு.க.

1. உப்பளம் – அன்பழகன் (முன்னாள் எம்.எல்.ஏ.)உருளையன்பேட்டை – காந்தி

ல.ஜ.க.

காமராஜ் நகர் – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

நெல்லித்தோப்பு – ஜெயக்குமார்

திமுக - காங்கிரஸ் கூட்டணி

புதுச்சேரியில் தேர்தலை காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக எதிர்கொள்கிறது.

திமுக - 12

காங்கிரஸ் - 16

இந்திய கம்யூனிஸ்ட் -1

திமுக தலைமை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கியிருந்த நிலையில், 3 தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.

போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு என அக்கட்சி அறிவித்துள்ளது.

தமிழக வெற்றி கழக புதுச்சேரி வேட்பாளர்கள்:

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில்

வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர்.

மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர்.ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b