Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமிக்கான இறுதி இழப்பீட்டு தொகையை வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது பரிசீலிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கையை சுதந்திரமாக மேற்கொண்டு, விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு தொடர்பாக உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam