Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 24 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை குழு சார்பில் கருத்து கேட்பு கூட்டமானது நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள செந்தூர் காட்டேஜில் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், அனுமதியின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இந்தக் கூட்டம் நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் குற்றாலம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கருத்து கேட்பு கூட்டம் நடத்திய தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உள்ளிட்ட 25 காங்கிரசார் மீது 2 பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி கருத்து கேட்பு கூட்டம் நடத்திய தென்காசி மாவட்ட காங்கிரசார் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN