நவீன குளியலறை உபகரணங்களின் ‘பர்பிள் பே’ நிறுவனத்தின் பிரம்மாண்ட புதிய கிளை துவக்கம்
கோவை, 24 மார்ச் (ஹி.ச.) கோவை ஆர்.எஸ்.புரம், பாஷ்யகர்லு சாலை மேற்கு பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ தனது புதிய கிளையை திறந்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்
Grand Launch of ‘Purple Bay’s’ New Branch


கோவை, 24 மார்ச் (ஹி.ச.)

கோவை ஆர்.எஸ்.புரம், பாஷ்யகர்லு சாலை மேற்கு பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ தனது புதிய கிளையை திறந்துள்ளது.

இதனை அந்த நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி இனிதே திறந்து வைத்தனர்.

புதிய இடம், புதிய அனுபவம் என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில், சர்வதேசத் தரம் வாய்ந்த நவீன குளியலறை வடிவமைப்புகள், பிரீமியம் ரக உபகரணங்கள், பாத் டப்கள், ஹீட் பம்ப் என்னும் நவீன தண்ணீர் சூடு செய்யும் சாதனங்கள், ஸ்டெய்லெஸ் ஸ்டீல் பைப்கள், தண்ணீர் சாப்டனர், மற்றும் வீட்டின் அழகை மேம்படுத்தும் வகையிலான பிரத்யேகக் கட்டமைப்புகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராம் சிவ பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரம்யா ராம் சிவ பிரகாஷ் கூறுகையில்,

வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த குளியலறை அனுபவத்தை ஒரே கூரையின் கீழ் வழங்குவதே எங்களின் நோக்கம். கோவையில் பிரேத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 3 தள ஷோரூம், வாடிக்கையாளர்கள் நேரில் வருகை தரும் போது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்று தெரிவித்தனர்.

இந்தத் திறப்பு விழாவில் நகரின் முக்கியத் தொழில் அதிபர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள், பொறியாளர்கள், உள்அலங்கார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b