கள்ள காதலிக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்து சொகுசாக வாழ திருட்டில் ஈடுபட்ட 24 வயது இளைஞர் - 24 மணி நேரத்தில் கைது!
கன்னியாகுமரி, 24 மார்ச் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிஜின் மோன் 27 வயது கப்பல் ஊழியரனா இவர் வேலைக்கு சென்ற நிலையில் மனைவி மற்றும் தாயார் வீட்டில் இருந்த போது ஞாயிற்றுகிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மர்ம ந
கைது


கன்னியாகுமரி, 24 மார்ச் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிஜின் மோன் 27

வயது கப்பல் ஊழியரனா இவர் வேலைக்கு சென்ற நிலையில் மனைவி மற்றும் தாயார் வீட்டில் இருந்த போது ஞாயிற்றுகிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்

பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றுள்ளார்.

திருட்டு சம்பவம் குறித்து சிஜின் மோன் மனைவி மேரி கிபி லின்ஸா குளச்சல் காவல்

நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீஸார் கைரோகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதோடு தப்பி சென்ற திருடன் விட்டு சென்ற பைக்கையும் பறிமுதல் செய்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா

காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அடுத்தடுத்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்த போலீஸார்

திருட்டில் ஈடுபட்டது அம்மாண்டிவிளை பகுதியில் தற்போது வாடகை வீட்டில்

வசிக்கும் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஜோஸ் ஆன்றணி என்பதை உறுதி செய்து அவரது செல்போண் எண்ணை டவர் லொக்கேஷன் மூலம் ஆய்வு செய்த போது அந்த

செல்போண் கடைசியாக அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள வீட்டில் செயல்பாட்டில்

இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள வீட்டை போலீஸார் சுற்றி வளைத்து

சோதனையிட்ட போது சகாய ஜோஸ் ஆன்றணி வீட்டில் இல்லாததால் ஏமாற்றமடைந்த போலீஸார் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட அவரது செல்போன் எண்ணின் இயக்கத்தை

கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை அவனது செல்போன் ஆன் ஆகி சற்று நேரத்தில்

மீண்டும் ஆப் ஆனதால் அவர் முட்டம் மீன்பிடி துறைமுகப்பகுதியில் இருப்பது செல்போன் டவர் லொக்கேஷன் மூலம் தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த பகுதியில்

கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீஸார் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து

வெளியே வந்த சகாய ஜோஸ் ஆன்றணியை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் காவல்

நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் 24 வயதான சகாய ஜோஸ் ஆன்றணிக்கு திருமணமாகாத நிலையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் அவர்களுடன் அடிக்கடி வெளியூர்களுக்கு இன்ப

சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் பண தேவைக்காக

திருட்டுக்களில் ஈடுபட்டு 9 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் இரவு திருட சென்ற வீட்டில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் 2 போக்சோ வழக்குகளும்

உள்ளதாக தெரிவித்த சகாய ஜோஸ் ஆன்றணி.

கேரளாவில் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கள்ள

காதலி சொந்தமாக வீடு வாங்கி கேட்டு தொடர்ந்து தொல்லை தந்து வந்ததாகவும் வீடு

வாங்கி தரவில்லை என்றால் தொடர்பை துண்டித்து விடுவதாகவும் கூறியதால் அவரது

ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டு ஞாயிற்றுகிழமை அதிகாலை பைக்கில் சென்று குறும்பனையில் உள்ள கப்பல் ஊழியரான சிஜின் மோன் வீட்டை நோட்டமிட்டு வீட்டின்

பின்பக்க ஜன்னல் கம்பிகளை இரும்பு ராடால் வளைத்து ஜன்னல் கம்பி வழியாக உள்ளே

புகுந்து அறை பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடியதாகவும் நடமாடும் சத்தத்தில் வீட்டில் இருந்த பெண்கள் சத்தம் போட்டதால் கொண்டு வந்த பைக்கை போட்டு விட்டு தப்பியோடியதாகவும் பின்னர் திருடிய நகைகளை டிராக் சூட் பாக்கெட்டில் வைத்து மறைத்து வீட்டிற்கு

கொண்டு சென்று நகைகளை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைத்து விட்டு

செல்போனையும் வீட்டில் வைத்தே ஆப் செய்து விட்டு முட்டம் மீன்பிடி

துறைமுகத்திற்கு சென்று போட் ஜெட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

விசைப்படகில் ஏறி பதுங்கி படுத்துறங்கி விட்டதாகவும் ஞாயிற்றுகிழமை இரவு

முழுவதும் விசைப்படகில் இருந்த தான் திங்கள்கிழமை காலை செல்போனை ஆன் செய்து

கேரளாவில் உள்ள காதலிக்கு தொடர்பு கொள்ள முயன்று முடியாததால் அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாங்குவதற்கு நல்ல வீடு இருந்தால் பார்த்து வைக்கவும் இன்று ஒரு

பொழுது கழிந்து விட்டால் நாளை முதல் நமக்கு ஒகோன்னு வாழ்க்கை என மேசேஜ் அனுப்பி விட்டு செல்போனை ஆப் செய்து விட்டதாகவும் வீட்டு தோட்டத்தில் பதுக்கிய 45 சவரன் நகை ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை

எடுத்து கொண்டு செவ்வாய்கிழமை கேரளாவில் உள்ள கள்ள காதலி வீட்டிற்கு தப்பி

சென்று நகைகளை விற்பனை செய்து சொந்த வீடு வாங்கி சொகுசாக வாழ திட்டமிட்டிருந்ததாகவும் செல்போன் எண்ணை டவர் லொக்கேஷன் மூலம் கண்காணித்த போலீஸார் தான் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து சுற்றி வளைத்து பிடித்து

விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சகாய ஜோஸ் ஆன்றணியை கைது செய்து அவர் வீட்டு தோட்டத்தில் பதுக்கி

வைத்திருந்த 45 சவரன் நகை திருட்டுக்கு பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும்

கட்டையை பறிமுதல் செய்த குளச்சல் போலீஸார் சகாய ஜோஸ் ஆன்றணியை இரணியல்

நீதிமன்றாத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கள்ள காதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழவும் காதலிக்கு வீடு வாங்கி கொடுக்கவும்

திருட்டில் ஈடுபட்ட 24 வயது இளைஞரை 24 மணி நேரத்தில் கைது செய்து நகைகளை மீட்ட

போலீஸாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam