வாட்ஸ்அப்பில் அந்தரங்க பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய வசதி விரைவில் அறிமுகம்!
சென்னை, 24 மார்ச் (ஹி.ச.) புகழ்பெற்ற செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப், உபயோகிப்பாளர்களின் அந்தரங்க பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, ஆஃப்டர் ரீடிங் என்று அழைக்கப்படும் இந்த வசதி, ஒரு செய்தி படி
வாட்ஸ்அப்பில் அந்தரங்க பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய வசதி விரைவில் அறிமுகம்!


சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)

புகழ்பெற்ற செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப், உபயோகிப்பாளர்களின் அந்தரங்க பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

அதன்படி, ஆஃப்டர் ரீடிங் என்று அழைக்கப்படும் இந்த வசதி, ஒரு செய்தி படிக்கப்பட்டவுடன் 15 நிமிடங்களுக்குள் தானாகவே மறையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், செய்தி திறக்கப்படாமல் இருந்தால், அது 24 மணி நேரத்தில் தானாகவே அழிந்துவிடும்.

தற்போதுள்ள டிஸ்அபியரிங் மெஸேஜஸ் வசதியில் 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்கள் போன்ற கால அளவுகள் உள்ள நிலையில், இந்த புதிய வசதி மிகக் குறுகிய காலத்திற்கான அந்தரங்க பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிபி, பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவல்களைப் பரிமாறும்போது இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM