Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
சென்னை திருமங்கலம் அருகே ஐந்து ஆண்டுகளாக 13 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக திமுக நிர்வாகி கைது - திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம்.
சென்னை திருமங்கலம் அருகே 13வயது சிறுமியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பள்ளிக்கூடம் தொடங்கி பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அக்கட்சியின் தலைமை கண்டும் காணாதது போலக் கடந்து சென்றதன் விளைவே அத்தகைய செயல்களில் திமுகவினர் தொடர்ந்து ஈடுபடக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகளிர் பாதுகாப்பிலும், பெண்கள் அதிகளவு வேலைக்குச் செல்வதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
எனவே, பச்சிளம் குழந்தை தொடங்கி வீட்டில் தனியாக இருக்கும் முதியவர் வரை அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலின் மூலம் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b