எல்.பி.ஜி தவிர, பி.என்.ஜி இணைப்புகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது - பிரதமர் மோடி
புதுடெல்லி, 24 மார்ச் (ஹி.ச.) மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (24.03.2026) உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்த நெருக்கடி சூழலில், உலகம் முழுவதும் உள்ள இந்த
எல்.பி.ஜி தவிர, பி.என்.ஜி இணைப்புகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது - பிரதமர் மோடி


புதுடெல்லி, 24 மார்ச் (ஹி.ச.)

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (24.03.2026) உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இந்த நெருக்கடி சூழலில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமை. இன்று வரை 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்.

ஈரானில் இருந்து மட்டும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இதில் 700க்கும் அதிகமானோர் மருத்துவ மாணவர்கள். இந்த இக்கட்டான நேரத்தில், மத்திய அரசு முழு உணர்திறனுடன் செயல்பட்டு வருகிறது.

அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அனைத்து நாடுகளும் உறுதி அளித்துள்ளன. இருப்பினும், சில இந்தியர்கள் உயிரிழந்ததும், தாக்குதல்களில் சிலர் காயமடைந்ததும் துரதிர்ஷ்டவசமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. இத்தகைய சவாலான சூழலிலும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் வழிகளைக் கண்டறிய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

எங்கெல்லாம் சாத்தியமோ அங்கிருந்தெல்லாம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்தியாவைச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த முயற்சிகளின் நோக்கம்.

கடந்த சில நாட்களில், கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி ஏற்றி வந்த கப்பல்கள் பல நாடுகளில் இருந்து இந்தியாவை வந்தடைந்துள்ளன. வரும் நாட்களிலும் இந்தத் திசையில் எங்கள் முயற்சிகள் தொடரும். எண்ணெய், எரிவாயு, உரங்கள் அல்லது முக்கியமான பிற பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் இந்தியாவை பாதுகாப்பாக வந்தடைவதை உறுதி செய்வதே இந்தியாவின் முயற்சியாக உள்ளது.

ஆனால், போர் காரணமாக நிலவும் உலகளாவிய சூழல் நீண்ட காலத்திற்கு நீடித்தால், அதன் கடுமையான தாக்கம் ஏற்படுவது உறுதி. எனவே, கடந்த சில ஆண்டுகளில் தனது மீள்திறனை அதிகரிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை மேலும் விரைவுபடுத்தி வருகிறது.

இந்தியாவில் போதிய கச்சா எண்ணெய் சேமிப்பு மற்றும் தடையற்ற விநியோகத்திற்கான அமைப்பு உள்ளது என்று இந்த அவைக்கும் நாட்டிற்கும் நான் உறுதி அளிக்க விரும்புகிறேன்

எரிபொருளுக்காக நாம் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் அதிகம் சார்ந்திருக்கக் கூடாது என்பதே எங்கள் அரசின் முயற்சி. எல்.பி.ஜி தவிர, பி.என்.ஜி இணைப்புகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், பி.என்.ஜி. இணைப்புகளில் முன்னெப்போதும் இல்லாத பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த சில நாட்களில் இது மேலும் வேகமெடுத்துள்ளது.

உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தியை பெரிய அளவில் அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வர்த்தகத்தில் 90%க்கும் அதிகமானவை வெளிநாட்டுக் கப்பல்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. உலகளாவிய நெருக்கடி ஏற்படும்போது இச்சூழ்நிலை இந்தியாவின் நிலையை மேலும் தீவிரமாக்குகிறது.

எனவே, 'மேட் இன் இந்தியா' (இந்தியாவிலேயே தயாரிப்போம்) திட்டத்தின்கீழ் கப்பல்களைக் கட்டுவதற்காக சுமார் 70 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b