நிலச்சரிவில் சிக்கிய 200 சுற்றுலா பயணிகள் - மீட்பு பணிகள் தீவிரம்
காங்டாங், 25 மார்ச் (ஹி.ச.) வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா தலமான லாச்சென் - சுங்தாங் சாலையில் உள்ள முன்ஷிதாங் பகுதியில் நேற்று இரவு க
நிலச்சரிவில் சிக்கிய 200 சுற்றுலா பயணிகள் - மீட்பு பணிகள் தீவிரம்


காங்டாங், 25 மார்ச் (ஹி.ச.)

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா தலமான லாச்சென் - சுங்தாங் சாலையில் உள்ள முன்ஷிதாங் பகுதியில் நேற்று இரவு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்வதால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிக்கிமின் வடக்கே உள்ள சுங்தாங் பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால், இன்று காலை சுற்றுலா பயணிகள் 200 பேர் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகள் சுங்தாங்கில் இருந்து மங்கன் பகுதிக்கு அங்குள்ள பெய்லி பாலம் வாயிலாக, தலைநகர் காங்டாகிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மங்கன் மாவட்ட ஆட்சியர் அனந்த் ஜெயின் நிலவரம் குறித்து கூறுகையில், முக்கியமான சுங்தாங்-லாச்சென் வழித்தடத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், லாச்சென் நோக்கிச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பாதியிலேயே சிக்கிக்கொண்டனர்.

சிக்கிக்கொண்ட பயணிகள், சுங்தாங்கில் உள்ள ஒரு ITBP முகாமிலும் ஒரு குருத்வாராவிலும் இரவு தங்க வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

எல்லைச் சாலைகள் அமைப்பின் (BRO) சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வானிலை நிலவரத்தைப் பொறுத்து, வழித்தடங்கள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்ட பின்னரே அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்து பயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b