Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 25 மார்ச் (ஹி.ச.)
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் கட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் நிதின் நபின், இன்று கொல்கத்தாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சிணேஸ்வர் காளி கோவிலில் தரிசனம் செய்து அருளாசி பெற்றார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தயார்நிலையை மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், கோவில் தரிசனத்துடன் தொடங்கின.
இந்தப் பயணம், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு கட்சி தீவிரப்படுத்தியுள்ள அமைப்புச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதன் போது, நிதின் நபின் பல்வேறு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இக்கூட்டங்களில், கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துதல், நடப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்தல் மற்றும் தொண்டர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் போன்ற அம்சங்கள் முக்கியமாகப் பேசப்படுகின்றன.
மேலும், மாநிலத்தின் அரசியல் நிலவரத்தை மதிப்பீடு செய்வதற்காக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் மற்றும் மக்களிடம் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்கு வங்கத்தில் தனது ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில் பாஜக மேற்கொண்டு வரும் பரந்த அளவிலான முயற்சிகளில், இந்தப் பயணம் முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b