பா.ம.க-வின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை, 25 மார்ச் (ஹி.ச) ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறி
PMK Releases First List of Candidates


சென்னை, 25 மார்ச் (ஹி.ச)

ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 3 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கீழ்வேளூரில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்,

அம்பத்தூரில் மாநிலத் துணைத் தலைவர்,

கே.என். சேகர்,

செஞ்சியில் பாமக இளைஞரணித்தலைவர் கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b