த.வெ.க தலைவர் நடிகர் விஜய் படங்களை ஒளிபரப்ப தடை கோரி காங்கிரஸ் நிர்வாகி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) காங்கிரஸ் நிர்வாகி செய்யது பாபு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றார். அந்த கடிதத்தில், விஜய் படங்களை போடுவதை தடை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்களிலும் தொலைக்காட்சிகளிலும் விஜய்
Ban on Broadcasting Films


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

காங்கிரஸ் நிர்வாகி செய்யது பாபு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றார்.

அந்த கடிதத்தில், விஜய் படங்களை போடுவதை தடை செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்களிலும் தொலைக்காட்சிகளிலும் விஜய் படங்களை போடுவதை தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கின்றார்.

இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

ஏற்கனவே தவெக தங்களின் அரசியல் எதிரி திமுக தான் என கூறி வருகின்றனர்.

தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் தவெக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகின்றது.

ஒருகட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ்கூட்டணி இணையும் என்ற பேச்சுக்கள் போய்க்கொண்டு இருந்த நிலையில் தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு உண்டாகி இருப்பதாக தெரிகிறது.

Hindusthan Samachar / vidya.b