Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 25 மார்ச் (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற குமரகிரி தண்டாயுதபாணி கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இக்கோவிலில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக மலை மீது மூலவரை தரிசிக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
யாக கால பூஜைகள் தொடங்கி நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் மூலவர் விமானம் உள்பட அனைத்து நிலை கோபுரங்களுக்கும் புனித நீருற்றி பக்தர்கள் அரோகரா கோஷங்களுக்கு இடையே குடமுழுக்கு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b