Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 27 மார்ச் (ஹி.ச.)
மார்ச் மாதம் வரும் நவமி நட்சத்திரத்தில் ராமபிரான் பிறந்ததால் இந்த மாதம் வரும் நவமி ராம நவமி என்று மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராமர் கோயில் இருக்கும் இடங்களில் இன்று ராமநவமி கொண்டாடப்படும். மேலும் ராமரை பூஜிக்கும் பக்தர்கள் பலரும் தங்களது வீடுகளில் இன்று ராமா நவமி கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை காந்திநகர் ஒன்றாம் வீதியில் உள்ள ராஜசேகர் என்பவர் அவரது வீட்டில் கடந்த 16 ஆண்டுகளாக ராமநவமி கொண்டாடி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் இந்த வீட்டுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது. அதுக்கு முன்னதாக வாடகை வீட்டில் வேறு பகுதியில் குடியிருந்தேன்.
அங்கும் கொண்டாடினேன், இங்கும் வந்து தொடர்ந்து கொண்டாடி வருகிறேன்.
இன்று இந்த கொண்டாட்டத்தின் போது பலருக்கும் அன்னதானம், பழ தானம் உள்ளிட்ட பல தானங்களையும் வழங்குவதில் நானும் என் குடும்பத்தினரும் மகிழ்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J