Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர், 29 மார்ச் (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் திரேஹாம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் நேற்று இரவு ராணுவ வீரர் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த தகவலை ராணுவ உயர் அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.
அதில்,சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக தெரிவித்த அதிகாரிகள் உடனே அந்த வீரர் மடக்கிப் பிடிக்கப்படுவதற்குள், இந்தச் சம்பவத்தில் மூன்று வீரர்கள் படு காயமடைந்ததாக கூறினர்.
காயமடைந்த வீரர்கள் உள்ளூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b