Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 29 மார்ச் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, வருவாய் அமைச்சரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) எம்.எல்.ஏ கல்வகுந்த்லா சஞ்சய் குமார் இன்று கோரிக்கை விடுத்தார்.
சஞ்சய் குமார், வருவாய் இழப்புக்கான ஆதாரங்களை அரசுக்கு சமர்பித்து, சட்டமன்றக் குழுவின் விசாரணை அவசியமென வலியுறுத்தியதாக கூறினார். பி.ஆர்.எஸ் தலைவர்கள் கன் பார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் குமார் கூறியதாவது,
வருவாய் அமைச்சர் மாநிலத்தின் அனைத்து வருவாயையும் கொள்ளையடிக்கிறார். இதற்கான ஆதாரங்களை நாங்கள் அரசுக்கு தெளிவாகக் காட்டியுள்ளோம்.
சட்டமன்றக் குழுவை உடனடியாக அமைக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
வருவாய் அமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b