தூத்துக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.) தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (30.03.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. வேட்புமனுத்
Filing Locations for Candidature in Thoothukudi Announced


தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.)

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (30.03.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடங்கள்:

வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அலுவலகங்களில் மனுத்தாக்கல் செய்யலாம்:

தூத்துக்குடி: தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகம்.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம்.

கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம்.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் தாலுகா அலுவலகம்.

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம்.

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ROs):

ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

தூத்துக்குடி: கோட்டாட்சியர் பிரபு.

விளாத்திகுளம்: மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா.

திருச்செந்தூர்: வருவாய் கோட்டாட்சியர் கௌதம்.

ஸ்ரீவைகுண்டம்: பிற்படுத்தப்பட்டோர் நல மாவட்ட அலுவலர் செந்தில் வேல் முருகன்.

ஓட்டப்பிடாரம்: கலால் உதவி ஆணையர் சுப்புலட்சுமி.

கோவில்பட்டி: கோவில்பட்டி சப்-கலெக்டர்.

முக்கியமான தேதிகள் மற்றும் நேரம்:

நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.

மனுத்தாக்கல் செய்ய வேண்டிய நாட்கள்: மார்ச் 30, ஏப்ரல் 2, 4 மற்றும் 6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும்.

இறுதி நாள்: ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும்.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு, மனுத்தாக்கல் நடைபெறும் அலுவலகங்களைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேட்பாளருடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b