Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.)
வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ 132-வது பகுதியைத்பிரதமர் நரேந்திர மோடி இன்று தொகுத்து வழங்கினார்.
அப்போது பேசிய அவர்,
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றநிலைக்கு மத்தியில், அப்பகுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு நன்றி.
உலகளாவிய எரிபொருள் நெருக்கடியையும் இந்தியா உறுதியுடன் சமாளித்து வருவகிறது.
மேற்கு ஆசிய மோதல் விவகாரத்தை அரசியல்மயமாக்க வேண்டாம் என்றும், வதந்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறும் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் இடையிலான பதற்றம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் புதிய திசையில் முன்னேறும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பல பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் உருவாகி வருகின்றன.
கடந்த ஒரு மாதமாக நமது அண்டைப்பகுதியில் கடுமையான போர் நிலவி வருகிறது.
லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள், அங்கு வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய வளைகுடா நாடுகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தொடர்பாக நெருக்கடி உருவாகி வருகிறது.
இந்தியாவின் வலுவான வெளிநாட்டு உறவுகள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வலிமைகள் இந்தச் சவால்களை எதிர்கொள்ள உதவுகின்றன.
இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் சுயநல அரசியலுக்கு இடமில்லை. 140 கோடி இந்தியர்களின் நலன்களுடன் இது தொடர்புடையது.
வதந்திகளை பரப்புவது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். மக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.
இதே வேளை, எல்பிஜி பற்றாக்குறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) பயன்பாட்டை விரிவுபடுத்தவும், அதற்கான உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்வில் தெரிவித்தார்
Hindusthan Samachar / JANAKI RAM