Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 மார்ச் (ஹி.ச.)
கேரளா சட்டமன்றத் தேர்தலையொட்டி பாலக்காடு, திருச்சூரில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த அவரை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க வினர் மற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசும் போது :
பிரதமர் கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வழியாக சென்று இருக்க கூடிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்களுடன் அவரை வரவேற்றோம்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துக் கொண்டு இருப்பதாகவும் எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டு உள்ளதாகவும், கோவையை பொறுத்த வரை திராவிட முன்னேற்ற கழகம் முன்னாள் ஊழல் அமைச்சர், இந்நாள் தியாகியை அறிவித்து இருக்கிறார்கள் கோவை தெற்குக்கு, தமிழக வரலாற்றிலே ஜெயிலில் இருந்து ஒரு அமைச்சரை வைத்து இருந்த பெருமை தி.மு.க விற்கு தான் உண்டு, அப்படி ஜெயிலில் இருக்கக் கூடிய ஊழல் கறை படிந்த அமைச்சரை கோவை மாதிரியான இடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளதின் வாயிலாக இரண்டு விஷயங்கள் நடக்கும்.
ஒன்று கடந்த முறை மாதிரி பத்துக்கு, பத்து என்று கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ வசம் வரும். இரண்டாவது இம்மாதிரி ஒரு ஊழல் கரை படிந்த அமைச்சரை, அனுப்பி இருப்பதின் வாயிலாக கோவை மக்களை தி.மு.க அவமரியாதை செய்து இருக்கிறது.
அது மட்டுமல்ல கோவையில் தி.மு.க விலேயே
எத்தனையோ ? ஆண்டு காலம் பணி செய்து இந்த பகுதியில் கட்சியை வளர்த்த உண்மையான தி.மு.க வின் உடைய விசுவாசிகளுக்கு எல்லாம் இந்த இடத்தில் இல்லாமல் கோயமுத்தூர் தி.மு.ககாரர்களை நம்பாமல் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த மாதிரி வெளி மாவட்டத்தில் இருந்து ஒருவரை இங்கு வேட்பாளராக நியமிப்பது வாயிலாக எங்கள் கூட்டணியின் உடைய வெற்றிக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து உள்ளதாக கூறியவர், இந்த முறையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் 21 போலவே 26 தேர்தல் முடிவுகளும் இந்த மாவட்டத்தில் இருக்கும் என்றார்.
த.வெ.க தலைவர் வேட்பாளர்கள் அறிவித்து உள்ளார். மீண்டும் போட்டியில் தி.மு.க வுக்கும், த.வெ.க விற்கும் தான் என்று கூறியது குறித்தான கேள்விக்கு,
இன்று தான் அறிவித்து உள்ளார் வேட்பாளர் பட்டியல், இன்னும் பத்து நாளுக்கு பிறகு களத்தில் பாருங்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூறியவர், புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாத்திற்கும் ஒரு பெரிய லட்சியத்துடன் தான் பேசுவார்கள். ஆனால் தேர்தல் அரசியல் என்பது வேறு, அதனால் புதிதாக களத்திற்கு வந்து சருக்கக் கூடிய கட்சி, முதல் தேர்தல் அவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு முதல் விஷயம் என்றால், ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்றும், அதனால் அவர்கள் கட்சிக்கொரு எதிர்பார்ப்பு இருக்கலாம், தலைவருக்கும் இருக்கலாம், ஆனால் அவருடைய பேச்சை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டால் தி.மு.க விற்கு மாற்று த.வெ.க என்பது இந்த தமிழகத்தில் இல்லை என்றவர், அதனால் தி.மு.க கூறுவது போன்று தமிழ்நாடு vs டெல்லி என்கின்றார்.
ஆனால் நாங்கள் சொல்கிறோம், இது முழுக்க, முழுக்க தமிழகத்தினுடைய வளர்ச்சி vs தி.மு.க வின் உடைய குடும்ப அரசியல், ஊழல் அரசியல், இதை முன்னிறுத்தி தான் எங்களது பிரச்சாரம் இருக்கப் போகிறது எனக் கூறினார்.
அதனால் த.வெ.க வினரின் அரசியல் வேலைகளை நாங்கள் கொஞ்சம் ஆர்வமாக பார்க்கலாம் என்றார்.
கோவை வடக்கில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கு,
வடக்கு மட்டுமல்ல, எங்களது மற்ற தொகுதிகள் உள்ளது. நாளையில் இருந்து வேட்பு மனு அனைவருக்கும் தெரியும், பாரதிய ஜனதா கட்சி தேசிய கட்சி. மாநிலத்தில் இருக்கின்ற மாநில தலைவர்கள் முடிவு செய்வது போன்று எங்களது கட்சியில் அப்படி முடிவு எடுக்க முடியாது, திரு.பியூஸ் கோயில் தேர்தல் பொறுப்பாளர், வெளிநாட்டில் உள்ளதால், நாளை காலை தான் வருகிறார்.
வந்ததற்கு பின்பு மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்ததற்கு பின்பாக அந்த பட்டியல் டெல்லி சென்று டெல்லியில் இருந்து எங்களது வேட்பாளர்கள் அறிவிப்பார்கள் என்றார்.
கந்தர்வகோட்டை தொகுதியை மீண்டும் பா.ஜ.க கைப்பற்றுவது குறித்தான கேள்விக்கு,
கூட்டணி பேச்சுவார்த்தை முழுக்க, முழுக்க கட்சியில் தலைவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களோடு நடந்ததாகவும், எங்கள் கட்சியிலும் மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள், மாநில தலைவர் அவர்களும் முன் நின்று நடத்திக் கொண்டு உள்ளதாகவும், கூட்டணிக்குள் எந்த ? தொகுதி வருகிறது, போகிறது. எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
பிரதமரை வரவேற்க அண்ணாமலை வரவில்லை குறித்தான கேள்விக்கு,
நான் வந்தவுடன் அண்ணாமலை எப்ப வருகிறார் என்று கேட்டேன், இல்லை வரவேற்பாளர்கள் பட்டியலில் பெயர் கொடுத்து அனுப்பியதாகவும், ஆனால் அவர் தான் வரவில்லை என்று தகவல் வந்ததாகவும், அது பற்றி கேட்பதாகவும் கூறினார்.
அண்ணாமலைக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு பதில் அளித்தவர்
இதுபோன்று தனித் தனியான ஆதரவாளர்கள் என்பது கிடையாது. அண்ணாமலை அன்பு கூட்டத்தில் நாங்களும் தான் இருக்கிறோம், நானும் தாங்க எனக்கு அன்புக்குரிய தம்பி. அதாவது தேர்தலில் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை, அறிவிப்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு கிடைக்கவில்லை, அவர்கள், இவர்கள் காரணம் என்பது அவசியமில்லை, பி.ஜே.பி ஒரு கட்டுக்கோப்பான கட்சி இரண்டாவது பி.ஜே.பி யில் யாருக்கு எந்த ? நேரத்தில்
எந்த ? பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு தெரியும். ஏனென்றால் ஒரு சிலருக்கு கட்சியில் உயர்ந்த பொறுப்பு கொடுப்பார்கள், ஒரு சிலருக்கு எம்.எல்.ஏ சீட்டு கொடுப்பார்கள், ஒரு சிலருக்கு எம்.பி சீட் கொடுப்பார்கள்.
எல்லாருக்கும் அந்த எதிர்பார்ப்புகள் இருக்க தான் செய்யும், ஒரு கட்சியில் சாதாரணமாக ஒரு ஐந்து ஆண்டு காலம் வேலை செய்தவர்களுக்கு கூட, ஆசை இருக்கும், ஆனால் கட்சி வந்து யாருக்கு எப்படி ? கொடுக்கணும் எந்த நிலவரத்தில் கொடுக்கணும். அந்த தொகுதியில் நம்மளுடைய வெற்றி வாய்ப்பு, வெற்றி வாய்ப்பை யாரு ? கொண்டு வருவார்கள்.
இது போன்ற பல்வேறு விஷயங்கள் தேர்தல் அரசியலில் உள்ளதாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J