Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 29 மார்ச் (ஹி.ச)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதத்தில், 14,667 புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
புதிதாக விண்ணப்பித்தவர்கள் பெயர்கள் வாக்காளர் துணை பட்டியலில் இடம்பெறும் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனித்தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்., 23ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், ஓசூர், வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி உள்பட, 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம், 7,76,318 ஆண் வாக்காளர்கள், 7,77,458 பெண், 264 உள்பட மொத்தம், 15,54,040 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சிறப்பு தீவிர திருத்த பணியின் தொடர்ச்சியாக, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், படிவம் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஜன.31 முதல் மார்ச், 26 வரை புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 வழங்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில், 14,667 புதிய வாக்காளர்கள், வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பத்துள்ளனர்.
அதில், ஊத்தங்கரையில் 1,945 வாக்காளர்கள், பர்கூர் - 1,860, கிருஷ்ணகிரி -2,365, வேப்பனஹள்ளி - 2,276, ஓசூர் 4,411 மற்றும் தளி 1,807 என மொத்தம், 6,584 ஆண் வாக்காளர்கள், 8,080 பெண்கள், இதரர், 3 பேரும் அடங்குவர்.
இதில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும் இருக்கலாம்.
தகுதியிருந்தும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கும் நபர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகின்றது.
வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்படும் போது, அவர்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b