குஜராத்தில் பிரதமர் மோடி நாளை மறுநாள் புதிய குறைக்கடத்தி மையத்தை திறந்து வைக்கிறார்
காந்திநகர், 29 மார்ச் (ஹி.ச.) குஜராத் மாநிலம் சானந்தில் உள்ள ''கெயின்ஸ் செமிகான்'' நிறுவனத்தின் வெளிப்புற ஒப்பந்த அடிப்படையிலான குறைக்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (ஓஎஸ்ஏடி) மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ( மார்ச் 31 )திறந்து
semiconductor facility in Gujarat


காந்திநகர், 29 மார்ச் (ஹி.ச.)

குஜராத் மாநிலம் சானந்தில் உள்ள 'கெயின்ஸ் செமிகான்' நிறுவனத்தின் வெளிப்புற ஒப்பந்த அடிப்படையிலான குறைக்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (ஓஎஸ்ஏடி) மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள்

( மார்ச் 31 )திறந்து வைக்க உள்ளார்.

இந்த மையம், இந்தியாவின் குறைக்கடத்தி இயக்கம் (Semiconductor Mission) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. மத்திய அரசு இதற்கான ஒப்புதலை செப்டம்பர் 23, 2024 அன்று வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்த முதலீட்டாக ₹3,300 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், சானந்த் பகுதியின் குறைக்கடத்தித் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக அமைந்துள்ளது.

'மைக்ரான்' நிறுவனத்தின் ஆலை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 'கெயின்ஸ் செமிகான்' நிறுவனத்தின் ஓஎஸ்ஏடி மையம் செயல்படத் தொடங்குவது, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் மேலும் ஊக்குவிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஓஎஸ்ஏடி மையம் குறைக்கடத்திச் சில்லுகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன் சோதனை செய்து பேக்கிங் செய்யும் செயல்முறையை மேற்கொள்ளும்.

அதன்படி, மார்ச் 31 அன்று திறக்கப்படவுள்ள இந்த ஆலை, நாளொன்றுக்கு 60 லட்சம் குறைக்கடத்திச் சில்லுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

Hindusthan Samachar / vidya.b