Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 30 மார்ச் (ஹி.ச.)
பாஜக தேசியத்தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சஞ்சய் சரோகி அதனை சட்டமன்ற சபாநாயகர் பிரேம் குமாரிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார்
நிதின் நபினின் ராஜினாமா கடிதத்தை சரோகி என்னிடம் சமர்ப்பித்தார் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் நடைமுறைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதை அனுப்பியுள்ளேன் என்றார்.
Hindusthan Samachar / vidya.b