2021 வாக்குறுதிகள் நிறைவேறவில்லை,திமுக அரசு ‘ALL FAIL’ - நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டு
சென்னை, 30 மார்ச் (ஹி.ச) 2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் 90% கூட நிறைவேற்றப்படவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொட
Nainar


He


சென்னை, 30 மார்ச் (ஹி.ச)

2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் 90% கூட நிறைவேற்றப்படவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

அதில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் 90% கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வி, வேலைவாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு, சமூக நீதி, சட்டம்-ஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மீண்டும் தேர்தல் வந்ததும் பழைய தேர்தல் அறிக்கையை புதிய வாக்குறுதிகள் போல வெளியிட முயற்சி நடைபெறுகிறது என்றும், தமிழக மக்கள் இனி அதனை நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அரசு “ALL FAIL” ஆகும் என்றும், மக்கள் இந்த ஆட்சியை நிராகரிப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ