புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் மின் தூக்கியில் சிக்கிக்கொண்ட 17பேர் பத்திரமாக மீட்பு
சென்னை, 30 மார்ச் (ஹி.ச.) சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ஷங்கர் மற்றும் சாந்தி ஆவார். இவர்கள் இருவரும் நேற்று திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி திருக்கோவிலுக்கு சென்று விட்டு திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்
லிஃப்ட்


சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ஷங்கர் மற்றும் சாந்தி ஆவார். இவர்கள் இருவரும் நேற்று திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி திருக்கோவிலுக்கு சென்று விட்டு திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில் மார்க்கமாக சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்பொழுது ரயில் மேடை இரண்டாவது மாடியில் உள்ள காரணத்தினால் இருவரும் மின் தூக்கி வாயிலாக கீழே இறங்க முடிவு செய்து மின் தூக்கியில் சென்றுள்ளனர். அவர்களைப் போன்று குழந்தைகள் உட்பட 17 பேர் மின் தூக்கி கீழே செல்வதற்காக உள்ளே நுழைந்துள்ளார்கள். அப்பொழுது மின் தூக்கி பாரம் தாங்காமல் மின் தூக்கி இரண்டாவது மாடியில் இருந்து முதல் மாடி இறங்கி செல்லும் ஒரு பாதி வழியிலேயே சிக்கிக்கொண்டது.

இதில் பயணம் செய்த 17 பேரும் பாதி வழியிலேயே சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து பயணிகள் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும் மின் தூக்கியில் ஒட்டப்பட்டிருந்த அவசர உதவி எண்ணிற்கும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டே வந்தனர்.

ஆனால் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஷங்கர் தனது அலைபேசி மூலமாக தனது நண்பரை தொடர்பு கொண்டு தாங்கள் மின் தூக்கியில் சிக்கிக்கொண்டது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் நண்பர் உடனடியாக தகவல் அறிந்த உடனே காவல்துறை அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தகவல் தெரிவித்த 15 நிமிடத்தில் வேளச்சேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி பிரபாகரன் தலைமையிலான ஐந்து தீயணைப்பு மற்றும் மீட்ப பணி வீரர்கள் மீட்பு உறுதியுடன் புழுதிவாக்கம் ரயில் நிலையம் வந்துள்ளனர்.

பின்னர் நீண்ட நேரம் போராட்டத்தினை தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டாவது தளத்தில் உள்ள மின் தூக்கி நுழைவாயிலை திறந்து அதன் வாயிலாக மின் தூக்கி மேற்பகுதிக்கு சென்று அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியை அகற்றி அதன் வாயிலாக முதலில் நான்கு குழந்தைகளை மிகவும் பத்திரமாக தீயணைப்புத் துறையினர் வீட்டுள்ளனர்.

மேலும் மின் தூக்கியில் சிக்கி இருந்த பயணிகளை மீட்பதற்கு முன்பு அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கி ஒன்றன்பின் ஒன்றாக மீதம் இருந்த 14 பேரையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டு அவர்களை பத்திரமாக உயிருடன் விட்டனர்.

மேலும் தீயணைப்பு துறையின் சார்பில் மின் தூக்கில் சிக்கி இருந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி செய்யும் பொருட்கள் அவசர உறுதியும் வரவழைக்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டது.

குறிப்பாக ஐந்து பேர் கொண்ட தீயணைப்பு குழு மின் தூக்கில் சிக்கி இருந்த 17 பேரையும் எந்தவித காயங்கள் இன்றி காப்பாற்றிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக தென்னக ரயில்வே துறை சார்பில் ஊறிய உதவி கிடைக்காத பொழுது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணத்தினால் மின் தூக்கியில் சிக்கி இருந்த போது கூட தாங்கள் பத்திரமாக வெளியே வந்து விடுவோம் என்கின்ற நம்பிக்கையை அவர்கள் வழங்கியதாக மின் தூக்கி சிக்கியிருந்த பயணிகள் பேட்டி அளித்துள்ளனர்.

மேலும் தென்னக ரயில்வே துறை சார்பில் இயக்கப்படக்கூடிய ரயில்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் செயல்படுவதன் காரணத்தினால் ரயில் நிலையங்களில் அடிக்கடி மின் கம்பங்கள் அருந்து விழுவது மற்றும் மின் தூக்கிகள் சரிவர இயங்காமல் போவது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் தென்னக ரயில்வே இதற்காக தனி கவனம் செலுத்தி பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam