சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வீடு முற்றுகை - வீரபாண்டி தொகுதி வேட்பாளரை மாற்ற கோரிக்கை
சேலம், 30 மார்ச் (ஹி.ச.) சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மருத்துவர் தருணுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் தரும் கடந்த 2021 தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் தோல்வியுற்றார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு வாய்
திமுக


சேலம், 30 மார்ச் (ஹி.ச.)

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மருத்துவர் தருணுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் தரும் கடந்த 2021 தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் தோல்வியுற்றார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை எடுத்து வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.

வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

இந்த நிலையில் சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரில் உள்ள மாநிலங்களவை உறுப்பினரும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ் ஆர் சிவலிங்கம் இல்லத்தை திமுக அதிர்ப்த்தியாளர்கள் முற்றுகை இட்டு உள்ளனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் தருணை மாற்றி பாரப்பட்டி சுரேஷ் அவர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam