Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 31 மார்ச் (ஹி.ச)
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டு வருவதை நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டுவருவதை நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சரண் ஜோஸ், ஐ.ஆர்.எஸ்., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் விதம், ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுவது உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் புழக்கம் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொண்டு, சரியான முறையில் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், அதேசமயம் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b