Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 31 மார்ச் (ஹி.ச.)
நாமக்கல்–மோகனூர் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு மகளிர் விடுதியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி உள்ளனர்.
மதிய உணவாக சாதம், முட்டை கோஸ் பொரியல் மற்றும் பரங்கிக்காய் சாம்பார் வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட பின்னர் மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 30 மாணவிகள் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு உணவுதான் காரணமா அல்லது வேறு காரணமா என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 9 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam