மகாவீர் ஜெயந்தி நன்னாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புதுடெல்லி, 31 மார்ச் (ஹி.ச.) மகாவீர் ஜெயந்தி நன்னாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பகவான் மகாவீரின் வாழ்வும் போதனைகளும் உண்மை, அகிம்சை மற்றும் கருணை ஆகிய பாதைகளைத் தொடர்ந்து ஒளிரச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்ட
மகாவீர் ஜெயந்தி நன்னாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


புதுடெல்லி, 31 மார்ச் (ஹி.ச.)

மகாவீர் ஜெயந்தி நன்னாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பகவான் மகாவீரின் வாழ்வும் போதனைகளும் உண்மை, அகிம்சை மற்றும் கருணை ஆகிய பாதைகளைத் தொடர்ந்து ஒளிரச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,

பகவான் மகாவீர் ஜன்ம கல்யாணக் (பிறந்தநாள்) எனும் புனிதமான நன்னாளையொட்டி எனது நல்வாழ்த்துகள்.

பகவான் மகாவீரின் வாழ்வும் போதனைகளும் உண்மை, அகிம்சை மற்றும் கருணை ஆகிய பாதைகளைத் தொடர்ந்து ஒளிரச் செய்து வருகின்றன.

அவரது கோட்பாடுகள் ஆன்மீக ரீதியாக எழுச்சியூட்டுவதாகவும், இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளன.

சமத்துவம் மற்றும் கருணைக்கு அவர் அளித்த முக்கியத்துவம், சமூகத்தின் மீதான நமது கூட்டுப் பொறுப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

என்று பதிவிட்டுள்ளார்

மேலும், மகாவீர் ஜெயந்தி நன்னாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பகவான் மகாவீரின் நிலையான போதனைகளையும் தத்துவங்களையும் நினைவுகூர்ந்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM