மஹாவீரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்
ராணிப்பேட்டை, 31 மார்ச் (ஹி.ச.) மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தவரின் சிறப்பு விழா. இந்த ஜெயந்தி மகாவீரர் சுவாமிகளின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.சமண மதத்தின் 24-ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீர் சுவாமி ஆவார். மஹாவீரர் ஜெயந்தியை மு
மஹாவீரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்


ராணிப்பேட்டை, 31 மார்ச் (ஹி.ச.)

மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தவரின் சிறப்பு விழா. இந்த ஜெயந்தி மகாவீரர் சுவாமிகளின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.சமண மதத்தின் 24-ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீர் சுவாமி ஆவார்.

மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (மார்ச் 31) ராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு அரிசியைக் கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, மஹாவீரர் சிலை மற்றும் திருவுருவப் படம் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் திரளான ஜெயின் சமூகத்தினர் பாடல்களைப் பாடிய படி மேளதாளங்கள் முழங்க ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்லக் கூடாது, மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b