Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 மார்ச் (ஹி.ச.)
மகாவீர் ஜெயந்தித் திருநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பகவான் மகாவீரின் போதனைகள், கருணையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை வாழ்வதற்கு மக்களுக்கு ஊக்கமளிப்பதாகக் குடியரசுத் தலைவர் முர்மு மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் முர்மு தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளதாவது,
மகாவீர் ஜெயந்தி எனும் இந்தத் புனிதமான நன்னாளில், நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும், குறிப்பாகச் சமணச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அகிம்சை, வாய்மை மற்றும் தன்னடக்கம் ஆகிய கோட்பாடுகளைப் போதித்த பகவான் மகாவீர், கருணை நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கு மக்களுக்கு உத்வேகம் அளித்தார்.
பகவான் மகாவீரின் போதனைகளிலிருந்து நாம் உத்வேகம் பெற்று, மிகவும் உணர்வுபூர்வமான, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கித் தொடர்ந்து பாடுபடுவோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM