Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 31 மார்ச் (ஹி.ச)
இந்திய தேர்தல் ஆணையம் வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத்தேர்தலில், அத்தியாவசியப் பணிகள் பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களுக்கு (AVES - Absentee Voters on Essential Service) தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்து உள்ளது. இதனடிப்படையில் பின்வரும் துறைகளை அத்தியாவசியப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
1. தமிழ்நாடு பிரிவின் கீழ் உள்ள தெற்கு இரயில்வே (Southern Railway under Jurisdiction of Tamil Nadu)
2. அகில இந்திய வானொலி (All India Radio)
3. கடல்சார் துறை (Marine Department)
4. இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India)
5. செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (Ministry of Information of Broadcasting)
6. ஊடகவியலாளர்கள் (Media Persons)
7. சென்னை மெட்ரோ இரயில் ஆணையம் (Chennai Metro Rail)
8. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை (Tamil Nadu State Transport Undertaking)
9. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (Tamil Nadu Power Distribution Corporation Ltd)
10. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (Fire and Rescue Services)
11. சிறைத்துறை (Prison and Correctional Services)
12. போக்குவரத்து காவல்துறை (Traffic Police)
தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விரும்பும் வாக்களர்கள் தேர்தல் அறிவிக்கை (Notification) வெளியான 5 நாட்களுக்குள் (03.04.2026) சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (Returning Officer) படிவம் 12D- இல் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அத்தியவாசிய தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர் அவரது துறை சார்ந்த தபால் வாக்கு ஒருங்கிணைப்பாளரிடம் படிவம் 12D-இல் இணைக்கப்பட்டுள்ள பாகம் II-ல் சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட அலுவலர்கள் தேர்தல் நடைபெறும் நாளான 23.04.2026-க்கு முன்பாக 17.04.2026, 18.04.2026, 19.04.2026 ஆகிய மூன்று நாட்களில் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குகள் செலுத்தும் அஞ்சல் வாக்கு மையத்தில் (PVC) வாக்குகள் செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b