Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் முன்னணி தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கி வருகிறது.
அவ்வப்போது வாட்சப் தனது பயனர்களின் தேவைக்கு ஏற்ப அப்டேட்களை செய்து வருகிறது.
அந்த வகையில் மெசேஜ்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதில் எழுதும் வகையில் ஏற்கனவே இருந்த 'ரைட்டிங் ஹெல்ப்' வசதியை வாட்ஸ் அப் மேம்படுத்தியுள்ளது.
ரைட்டிங் ஹெல்ப்-இல் ஏற்கனவே உள்ள வசதி மூலம் செய்திகளைத் திருத்தவும், அதன் தொனியை மாற்றவும் முடிந்தது.
இந்நிலையில் புதிய அம்சம் மூலம் பயனர்களின் உரையாடல்களுக்கு ஏற்றவாறு பதில்களை பரிந்துரைக்க ஏஐ-ஐப் பயன்படுத்துகிறது.
பயனர்கள் எல்லாவற்றிற்கும் பதில் எழுதவதற்கு பதிலாக தங்கள் எண்ணங்களைச் சரியாகப் பிரதிபலிக்கும் வகையில் முந்தைய சாட் ஹிஸ்டரியை ஆராய்ந்து ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட பதில்களை சாட்களுக்கு உபயோகிக்கமுடியும்.
சாட் பாரில் உள்ள ஸ்டிக்கர் ஐகானைத் தட்டி, அங்கிருக்கும் ஏஐ ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் இருக்கும் என்று வாட்ஸ்அப் உறுதி அளித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM