சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை
சேலம், 31 மார்ச் (ஹி.ச.) சேலம் மாவட்டம், வீரபாண்டி குட்டக்காடு, அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கலையரசன், 29, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கலையரசனுக்கும், ராக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் ப
கொலை


சேலம், 31 மார்ச் (ஹி.ச.)

சேலம் மாவட்டம், வீரபாண்டி குட்டக்காடு, அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கலையரசன், 29, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கலையரசனுக்கும், ராக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, பழகி வந்துள்ளனர்.

இது குறித்து பெண் வீட்டுக்கு தகவல் தெரிந்ததும், அந்த பெண்ணையும், கலையரசனையும் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.ஆனாலும் தொடர்ந்து, அந்த பெண்ணை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் உறவினர்கள், கலையரசனை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும், குட்டக்காடு பகுதிக்கு வருமாறு கூறினர். இதையடுத்து கலையரசன் நேற்று மாலை அந்த இடத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது பெண் உறவினர்கள் தரப்பினருக்கும், கலையரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது முற்றிய நிலையில், பெண் உறவினர்கள் ஆத்திரமடைந்து, கலையரசனை கைகளாலும், அங்கு கிடந்த கல்லை எடுத்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கலையரசனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.ஆட்டையாம்பட்டி போலீசார், கலையரசன் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் பெண் உறவினர்கள் சிலர், கடுமையாக தாக்கியது தெரிவந்துள்ளது.

இதனால் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam